Tuesday, April 7, 2015

"பண்புசார் தரமிக்க பாடசாலை"



எமது நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நற்பிரஜைகளை உருவாக்குவது பண்புசார் தரமிக்க கல்வியின் அடிப்படை இலக்காகும்.  

இலட்சியவாதிகளையும், நாட்டுப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய நட்பிரஜைகளையும் உருவாக்குவதற்கு. ​பண்புசார் தரமிக்க தேர்ச்சி மையக் கல்வி முறைமை வாய்ப்பளிக்கிறது.

தேர்ச்சி மையக் கல்வி முறைமையினை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் நோக்கங்களை அடைவதற்காக வெளிப்படைத்தன்மைகொண்ட முகாமைத்துவத்துடனான வினைத்திறன் மிக்க பாடசாலை முறைமையை ஸ்தாபிப்பதில் அதிபர், ஆசிரியர்கள், பெ​ற்றோர் உட்பட முழுப் பாடசலைச் சமூகத்தினரும் சுதந்திரமாகப் பங்கேற்பதற்கு கல்வி அமைச்சு வாய்ப்பளித்துள்ளது. 

பாடசாலை செயற்பாடுகள் மிகவும் நடைமுறைச்சாத்தியமானதாகவும், வெளிப்படைத்தன்மையானதாகவும், செயற்றிறன் மிக்கதாகவும், துல்லியமாகவும் செயற்படுத்துவதனூடாக வளப்பயன்பாடு உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலை சமுகம் திட்டமிட்டு செயற்படுவதற்கான சுதந்திரம் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்புரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டற் கைந்நூல் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றுநிருபம் பற்றும் வழிகாட்டல் கைந்நூல் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி கல்வியின் இலக்கை அடையும் வகையில் அனைத்து மாணர்களும்  கற்றல் தேர்ச்சிகளுடன் அடிப்படை வாழ்க்கைத் தேர்ச்சிகளையும் பெற்று சிறந்த பிரஜைகளாக சமூகத்துக்கு கையளிக்கும் பொறுப்பு பாடசாலை சமுகத்தைச் சாரும்.

தரம்-1 இல் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் பாடசாலைக் கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறும் தேர்ச்சிகளைப் பெற்று சமூக, பொருளாதார, அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த பிரஜைகளாக சமூகத்துக்கு கையளிக்கும் பாடசாலையே பண்புசார் தரமிக்க பாடசாலையாகும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.